பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாக தமிழக அரசு திகழ்வதாகவும் தெரிவித்தார்.