வரும் ஏப்ரல் மாதம் சென்னைக்கு புது வரவு

Update: 2025-01-10 16:23 GMT

சட்டப்பேரவையில், வி.சி.க. உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 589 தாழ்தள பேருந்துகள் உள்பட 3 ஆயிரத்து 4 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். டெண்டர் விடப்பட்டு, கூடு கட்டும் பணியில் 2 ஆயிரத்து 832 பேருந்துகள் உள்ளதாகவும், டெண்டர் நிலையில் ஆயிரத்து 614 பேருந்துகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வரும் ஏப்ரல் மாதத்தில், 500 புதிய மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கூறிய அவர், மேலும் 500 மின்சார பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்