பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு

Update: 2025-01-04 02:30 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் 12 ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு 27 ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

தாம்பரம் கன்னியாகுமரி இடையிலான சிறப்பு ரயில் 13-ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10-30 மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் 14ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மதியம் 12:30 மணிக்கு புறப்படுகிறது.

ராமநாதபுரம் - தாம்பரம் இடையிலான வாரம் இரு முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் ராமநாதபுரத்திலிருந்து 10, 12 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மதியம் மூன்று முப்பது மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் 11, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில், 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரவு 11

-30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து புறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்