பாஜக மாவட்டத் தலைவர் கைது...போராட்டம்- தள்ளுமுள்ளு - பரபரப்பு காட்சிகள்
பழனியில் பாஜக மாவட்டத் தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரையில் கடந்த 3-ஆம் தேதி பாஜக மகளிரணியின் நீதிப் பேரணியில் பங்கேற்கச் சென்ற திண்டுக்கல் பாஜக மகளிரணியினரை போலீசார் கைது செய்தனர். அவர்களை பார்க்க சென்ற கனகராஜ், தனியார் மதுபானக்கூடத்திற்குள் சென்று, அங்கு சட்ட விரோதமாக மதுபானம் விற்பதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழனியில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள், பழனி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.