காஷ்மீராய் மாறிய ஊட்டி - கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சி | Ooty | Nilgiri | Snow Fall | Thanthi TV
உதகையில் கடந்த சில நாட்களாக உறை பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பல பகுதிகள் காஷ்மீர் போலவே காட்சியளிக்கின்றன. குறிப்பாக உதகை நகரில் உள்ள குதிரைப் பந்தய மைதானம், காந்தள், காந்தள், தலைகுந்தா உள்ளிட்ட பகுதியில் உள்ள புல் மைதானங்களில் கொட்டி கிடந்த உறை பனியால் பச்சை பசேலன காட்சியளிக்கும் புற்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் வெண்மையாக காணப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மீது உறைப்பனி கொட்டி கிடந்ததால் கார்கள் வெள்ளை நிறமாக காட்சியளிகின்றன. இரு சக்கர வாகனங்கள் மீதும் கொட்டிக் கிடந்த உறை பனியால் வெள்ளையாக காட்சியளித்தன.