ஊட்டியில் திரண்ட மக்கள்... மகிழ்ச்சி பொங்க அனுபவத்தை பகிர்ந்த சுற்றுலா பயணிகள்

Update: 2024-12-29 14:09 GMT

தொடர் விடுமுறை காரணமாக உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். இதமான காலநிலையில், மோட்டார் படகு, மிதி படகு, துடுப்பு படகுகளில் பயணம் செய்து குளுகுளு காலநிலையை அனுபவித்தனர். கிறிஸ்துமஸ் நாளான 25 ஆம் தேதியிலிருந்து இன்று வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் படகு இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்