2024ம் ஆண்டில் 17.72 லட்சம் வழக்குகளை முடித்து வைத்த தமிழக நீதிமன்றங்கள்

Update: 2025-01-01 09:05 GMT
  • தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 2023ஐ விட, 2024இல் மிக அதிக வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
  • தமிழகம் முழுவதும் தற்போது 15 லட்சத்து 16 ஆயிரத்து 874 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • தமிழக நீதிமன்றங்களில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2023இல் ஒரு லட்சத்து 56 ஆயிரமாக இருந்து, 2024இல் 17 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
  • சென்னை உயர் நீதிமன்றத்தில், 2024இல் மொத்தம், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 416 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
  • சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், 2024இல் 84 ஆயிரத்து 53 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
  • வழக்குகள் தேக்கம் ஒரு புறம் இருந்தாலும், முடித்து வைக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்