சென்னையில் 13 வயது சிறுமிக்கு நரக வேதனை - காம மிருகத்துக்கு நரகமாக மாறிய 2025
சென்னையில் 13 வயது சிறுமிக்கு நரக வேதனை.. காம மிருகத்துக்கு நரகமாக மாறிய 2025.. சாகும் வரை மறக்க முடியா தீர்ப்பு
- சென்னையில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- பள்ளி முடிந்து வீடு திரும்பிய 13 வயது சிறுமியை, அதே பகுதியில் வசித்து வந்த சையது இப்ராஹிம் என்பவர், தனது வீட்டுக்கு கொண்டு சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- இது குறித்து தாய் அளித்த புகாரின் அடிப்படையில், சையது இப்ராஹிம் மீது பூக்கடை அனைத்து மகளிர் போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் சையது இப்ராஹிமுக்கு ஆயுள் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
- அபராத தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதியப்பட்ட இந்த வழக்கில் சரியாக ஒரு ஆண்டு கழித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.