என்ன கேரளா மினி பாகிஸ்தானா? - பாஜக அமைச்சரை லெப்ட் ரைட் வாங்கிய கேரள முதல்வர்

Update: 2025-01-01 09:26 GMT

                                        என்ன கேரளா மினி பாகிஸ்தானா? - பாஜக அமைச்சரை லெப்ட் ரைட் வாங்கிய கேரள முதல்வர்

  • கேரளாவை மினி பாகிஸ்தான் என்று விமர்சனம் செய்த மகாராஷ்டிரா அமைச்சருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • கேரளாவில் இந்துக்கள் எண்ணிக்கை குறைவதாக பேசியிருந்த மராட்டிய பாஜக அமைச்சர் நிதேஷ் ரானா, பாகிஸ்தானை போலதான் கேரளாவில் இந்துக்கள் நடத்தப்படுகிறார்கள் என விமர்சித்தார்.
  • கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என குறிப்பிட்ட நிதிஷ் ரானா, அதனால்தான் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியு வெற்றி பெறுகிறார்கள், அவர்களுக்கு பயங்கரவாதிகள் வாக்களிக்கிறார்கள் என்றார்.
  • நிதேஷ் ரானா பேச்சுக்கு பல தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ள வேளையில், அவரது கருத்து மிகவும் தீங்கிழைக்க கூடியது என பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தின் கோட்டையாக விளங்கும் கேரளாவிற்கு எதிராக சங் பரிவாரால் நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரங்களை இது பிரதிபலிக்கிறது, கேரளா மீதான இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்றவர் சங் பரிவாரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என கேட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்