திடீரென DSP ஆபீஸ் முற்றுகை... பரபரப்பு காட்சிகள் | Madurai

Update: 2025-01-01 08:47 GMT

                                                             திடீரென DSP ஆபீஸ் முற்றுகை... பரபரப்பு காட்சிகள்

  • மதுரை மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
  • நேற்று முன்தினம் நாவினிப்பட்டியைச் சேர்ந்த கோவில் மாடு, நா.கோவில்பட்டியில் உள்ள வயலில் மேய்ந்துள்ளது.
  • இதனால் ஆத்திரமடைந்த அடையாளம் தெரியாத சிலர் கோவில் மாட்டினை கம்பியால் குத்தி தாக்கியுள்ளனர்.
  • இதுகுறித்து நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சென்று கேட்கும் போது வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி மதுபோதையில் இருந்த நாவினிப்பட்டியைச் சேர்ந்த சிலர் நா.கோவில்பட்டி கிராமத்தில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
  • இதனையடுத்து நா.கோவில்பட்டியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள், மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர்...
  • உரிய விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்