குடித்துவிட்டு தாய்க்கு தொல்லை.. - மருமகனுடன் சேர்ந்து மகனை கொன்ற அப்பா..
புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் - முனியம்மா தம்பதியின் மகன் முனுசாமி... காத்தவராயன் தனது மகன் முனுச்சாமியை கட்டையால் அடித்துக் கொலை செய்தார்... மருமகன் ராஜேஷ் உதவியுடன் உடலைக் கல்லைக் கட்டி குளத்திலும் வீசியுள்ளார். போலீசார் இவ்விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி காத்தவராயனையும் ராஜேஷையும் கைது செய்த நிலையில் கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது... திருமணமாகியும் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் முனுசாமி... இதனால் அவரது மனைவியும் பிரிந்து சென்று விட்டார்... தாய் தந்தையோடு இருந்து வந்த முனுசாமி நாள்தோறும் குடித்து விட்டு வந்து தந்தை காத்தவராயனையும் தாய் முனியம்மாவையும் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் கடந்த 17ம் தேதி இரவு வழக்கம் போல குடித்து விட்டு வந்து தாய் முனியம்மாவை அடித்து துன்புறுத்தியுள்ளர்... இதைக்கண்டு ஆத்திரமடைந்த தந்தை காத்தவராயன் அருகில் இருந்த கட்டையை எடுத்து முனுசாமியை ஓங்கி அடித்த நிலையில் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் முனுசாமி... தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.