இங்குள்ள மருத்துவமனை வழியாக நான்கு வழிச்சாலைக்கு செல்லும் தெருவில் மேற்கு பகுதியில் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்கம்பம் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இது தொடர்பான செய்தி நமது தந்தி தொலைக்காட்சியில் வெளியானதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி தற்போது புதிய மின் கம்பத்தை நட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.