கை, கால் கட்டு, கழுத்து அறுப்பு..வாய் பேச முடியாதவரை சிதைத்தது யார்? - சென்னையை மிரளவிட்ட கொலை
சென்னை புறநகர் பகுதியான ஆலப்பாக்கத்தில் சாலையோரம் வெட்டு காயங்களுடன் கிடந்த இளைஞரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். ஆலப்பாக்கம் - மப்பேடு செல்லும் சாலையில் இயங்கி வரும் கூழாங்கற்கள் குடேன் அருகே இளைஞர் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் போலீசார், கழுத்து அறுபட்டு இறந்து கிடந்த இளைஞர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், எண்ணூர் பகுதியைச் சேர்ந்த காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான சூர்யா, சேலையூரில் தனது அண்ணனுடன் தங்கி எலக்ட்ரீஷியனாக பணியாற்றியது தெரியவந்துள்ளது. கை, கால் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டிருந்ததால் இது கொலையாக இருக்கும் என சந்தேகம் அடையும் போலீசார், காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.