கோவையை அதிரவைத்த விபத்து..கசிந்த 100கிலோ கேஸ்..முடிவுக்கு வந்த 8மணி நேர திக் திக் போராட்டம்..
கோவை அவிநாசி மேம்பாலத்தில் 8 மணி நேர போராட்டத்திற்குப்பின், கேஸ் டேங்கர் லாரி மீட்கப்பட்டது. கோவை உப்பிலிபாளையம் அருகே அவிநாசி மேம்பாலத்தில் இன்று அதிகாலை கொச்சியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல் காண்ட்ராக்டராக இருக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, டேங்கரை ராட்சத கிரேன்கள் உதவியுடன் தூக்கி நிலை நிறுத்தினர். இந்த விபத்தில் 100 கிலோ கேஸ் மட்டுமே கசிந்ததாக பாரத் பெட்ரோலிய ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.