மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் ஆலயமான புனித சுமதி நாத் ஆலய கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, பெண் மதகுருமார்கள் முன்னிலையில் சிறப்பு வழிபாடுகள் பஜனை பாடல்கள் தீப ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. பாடலுக்கு ஏற்ப ஒவ்வொரு பக்தராக வந்து வெண்சாமரம் வீசி வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.