கண்ணகி வேடத்தில் ஆவேசம்.. கைது செய்ததும் கண்ணீர்விட்ட பெண் - பாஜக போராட்டத்தில் நாடகக் கலைஞர்கள்..
மதுரையில் பாஜக மகளிரணி சார்பில் நடைபெற்ற நீதிகேட்பு பேரணிக்கு கண்ணகி வேடமிடுவதற்காக வந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தபோது அவர் சம்பளத்திற்கு வந்ததாக கூறி கதறி அழுதார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த உமா என்ற பரதநாட்டிய பெண் கலைஞர் கையில் சிலம்பம் வைத்து கண்ணகி வேடமிட்டபடி போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது கண்ணகியின் மறு உருவமாக நீதி கேட்டு வந்திருக்கிறேன் என, கையில் சிலம்புடன் வீர வசனம் பேசியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். கண்ணகியை போலீசார் கைது செய்த போது, சம்பளத்திற்காக வந்ததாகவும், போராட்டத்திற்கு வரவில்லை எனவும் கண்ணீர் விட்டு அழுதார். வேடமிடுவதற்காக வந்த என்னை இப்படி கைது செய்கிறீர்களே என கதறி அழுத அவரை, காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றினர். அப்போது, தனக்கு குழந்தை இருப்பதாக கூறியதும் போலீசார் அந்த பெண்ணை விடுவித்தனர்.