பணம் கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்.. மறுத்த மனைவி.. பிளேடால் கழுத்தறுத்து கொலை

Update: 2025-01-06 02:17 GMT

பணம் கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்.. மறுத்த மனைவி.. பிளேடால் கழுத்தறுத்து கொலை

ஓசூர் அருகே குடும்பத் தகராறில், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த கீழ்சூடாபுரம் பகுதியை சேர்ந்த கல்பனா, பெயிண்டராக பணியாற்றி வந்த ஆனந்தகுமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்தார். மதுப்பழக்கமுடைய ஆனந்த குமார், பணம் கேட்டு கல்பனாவிடம் அடிக்கடி தகராறு செய்வார் என கூறப்படுகிறது. வழக்கம்போல், மதுபோதையில் கல்பனாவிடம் தகராறில் ஈடுபட்ட ஆனந்தகுமார், திடீரென பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்து தப்பியுள்ளார். இதில் காயமடைந்த கல்பனா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் தப்பியோடிய கணவர் ஆனந்த்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்