குமரி மாவட்டம் நாகர்கோவிலில், பொதுப்பாதையில் சுவர் எழுப்பி மாற்று சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினரை தனிமைபடுத்தியதுடன், குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 29 ஆண்டுகளாக கீழச்சரக்கல் விளை பகுதியில் சுந்தரம் என்பவரது குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அங்கு உள்ள பிறர் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனால், சுந்தரம் குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அடைத்து சுவர் எழுப்பியும், அதன் மேல் துணி வைத்து அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளையும் துண்டித்த நிலையில், இதுவரை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் வேதனை தெரிவித்தனர்.