ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பண்ணாரி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பூச்சாட்டுதலுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். மேளதாளம் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தெப்பக்குளத்திற்கு சென்று தீர்த்தம் எடுத்துவரப்பட்டது.