"நாடு முழுவதும் மூடப்பட்ட 30,000 அரசு வங்கி கிளைகள்" -வெங்கடாசலம் அதிர்ச்சி ரிப்போர்ட்
நாடு முழுவதும், முப்பதாயிரம் அரசு வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அதற்கு நேர்மாறாக தனியார் வங்கிகள் அதே எண்ணிக்கையில் கிளைகளை கூடுதலாக திறந்துள்ளதாகவும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். அரசு வங்கிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளதாக கூறிய அவர், 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது சரியல்ல என தெரிவித்தார்.