முதுகில் குத்திய உயிர் நண்பன்.. ஆசை மனைவி பச்சை துரோகம் - நரக வேதனையில் துடித்த கணவன்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, தகாத உறவிற்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்ய முயற்சித்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். கணவரின் நண்பருடன் மனைவிக்கு தகாத உறவு ஏற்பட்ட நிலையில், கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் பலத்த காயங்களுடன் கணவர் தப்பிய நிலையில், மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளார்.