வழக்கமான 2 முயற்சி பெயிலியர் ஆனதால் 3ம் முயற்சியில் கணவனை வினோத முறையில் கொன்ற மனைவி
காஞ்சிபுரம் மாவட்டம் புதுநல்லூர் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி ரவி, 20 ஆண்டுகளுக்கு முன் ஜெயந்தி என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் ரவி, வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயந்தி, சமையல் எண்ணெய்யை கொதிக்க வைத்து தூங்கிக்கொண்டு இருந்த ரவி மீது ஊற்றியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த ரவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் ஜெயந்தியை கைது செய்து சிறையில் அடைந்தனர்.