பஸ்ஸில் நம்மை அறியாமலே நாம் அனைவருமே தினமும் செய்ய கூடிய செயல் இன்று ஒரு உயிரையே பறித்தது..

Update: 2024-12-09 05:47 GMT

பஸ்ஸில் நம்மை அறியாமலே நாம் அனைவருமே தினமும் செய்ய கூடிய செயல்.. இன்று ஒரு உயிரையே பறித்தது.. உயிர் பிரிந்தும் மூடாத கண்கள்

பின் இருக்கையில் இருந்து முன் இருக்கைக்கு செல்ல ஓடும் அரசு பேருந்தில் எழுந்த பெண் ஒருவர், அச்சமயம் பார்த்து பேருந்து வளைவில் திரும்பியதால் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கு இந்த விபரீதம்? பார்க்கலாம் விரிவாக..

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில்தான் இந்த விபரீதச் சம்பவம்..

திடீரென 40 வயதுமிக்க பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்ததும், தலையில் பலத்த காயமடைந்து அவர் துடிதுடித்து உயிரிழந்ததும் அப்பகுதிவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

விசாரணையில், உயிரிழந்தது திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கவிதா என்பது தெரியவந்திருக்கிறது..

உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி செல்லும் பேருந்தில் ஏறிய அவர், முதலில் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்ததாகவும், பின்னர் அந்த இருக்கை அசெளகரியத்தை கொடுத்ததால் முன் இருக்கைக்கு செல்ல திடீரென எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த சமயம் பார்த்து பேருந்து வளைவில் திரும்பிய நிலையில், தடுமாறிய கவிதா..கைப்பிடி நழுவியும், கால் தவறியும் கீழே விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...

நம்மில் பலரும் அன்றாடம் செய்யும் ஒரு செயல்... ஒரு பெண்ணுக்கு விபரீதமாகி அவரின் உயிரே பறிபோயிருப்பது மனதை கலங்கடித்திருக்கும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்