சாவு பயத்த காட்டிட்டான் பரமா...“-சிறுத்தையிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பிய நாய்

Update: 2024-12-23 08:24 GMT

நீலகிரி குன்னூரில் குடியிருப்பில் புகுந்த சிறுத்தையிடம் இருந்து வளர்ப்பு நாய் சாமர்த்தியமாக தப்பிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெலிங்டன் அருகே தனியார் பள்ளிக்கு பக்கத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை நாயைத் துரத்தி வேட்டையாட முயன்றது... ஆனால் குரைத்தே நாய் சிறுத்தையை விரட்டிய நிலையில், சிறிது நேரத்திலேயே நாய் அசந்த நேரம் பார்த்து அடிக்கலாம் என நினைத்து மீண்டும் பாய்ந்தது. அப்போதும் போராடி சிறுத்தையிடம் இருந்து புத்திசாலித் தனமாக தப்பியது அந்த வளர்ப்பு நாய்...

Tags:    

மேலும் செய்திகள்