இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து,
45 ஆயிரத்து 920 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில்
கிராம் ஒன்று 5 ஆயிரத்து 740 ரூபாயாக விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 76 ரூபாயாக
விற்பனையாகிறது. டிசம்பர் 28இல், 47 ஆயிரத்து 560 ரூபாயாக
புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக
குறைந்து வருகிறது.