பட்டப்பகலில் சாலையில் குறுக்கே வந்த காட்டு யானை.. ஸ்டன்னாகிய நின்ற வாகன ஓட்டிகள்
ஈரோடு சத்தியமங்கலத்தில் பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையை காட்டுயானை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டுயானை சாலையை கடந்து சென்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்தனர்.