``யார் அந்த சார்?'' ஆயுதத்தை கையில் எடுத்த அதிமுக - அடுத்தடுத்து மாஸ் சம்பவம்... தொற்றிய பரபரப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வைத்து, யார் அந்த சார் என்ற கேள்வியுடன் அதிமுகவினர் தொடர்ந்து நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன், சார் ஒருவருக்கும் ஒத்துழைக்க வேண்டும் என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து, யார் அந்த சார் ? என கேள்வியுடன் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டள்ளன. இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அதிமுக சார்பில் நூதன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.