ஓசூரில் நள்ளிரவில் திருட வந்த மர்ம நபரை தெரு நாய்கள் துரத்தியதால் இருசக்கர வாகனங்கள் தப்பி உள்ளன.
ஓசூர் நகரின் மைய பகுதியான எம் ஜி சாலை, நேதாஜி சாலையில் உள்ள கடைகளுக்குள் மர்ம நபர்கள் புகுந்து திருடி உள்ளனர். இதேபோல, சிவசக்தி நகரில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை மர்ம நபர் ஒருவர் திருட வரும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அங்கு நின்ற தெரு நாய்கள் தொடர்ச்சியாக குரைத்ததால் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மின் விளக்கை எரிய விட்டபடி வெளியே வந்தார். உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த காட்சிகள் வைரலாகி உள்ளநிலையில், இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.