பிரபல கட்சியுடன் இர்பானுக்கு நெருக்கமா? - அதிர்வை கிளப்பிய பரபரப்பு வீடியோ ரிலீஸ்
அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய யூ டியூபர் இர்ஃபான் தனக்கு அரசியல் பின்புலம் இல்லை என விளக்கமளித்துள்ளார். கார் விபத்து, குழந்தையின் பாலினத்தை அறிவித்தது மற்றும் குழந்தை பிறப்பின் போது தொப்புள் கொடியை வெட்டியது உள்ளிட்ட விவகாரங்கள் பெரும் பூதாகரமான நிலையில், சுகாதாரத்துறை இர்பானுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினாலும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் எழுந்தது. ஆளும் திமுகவுடன் இர்ஃபான் நெருக்கமாக உள்ளதால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் தனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது என இர்ஃபான் விளக்கமளித்துள்ளார்... துணை முதல்வர் உதயநிதியுடன் தான் வெளியிட்ட வீடியோ புரோமோசனுக்கானது மட்டுமே என்றும் கூறியுள்ளார்.