கிருஷ்ணகிரி அருகே நள்ளிரவில் காபி ஷாப்புக்குள் புகுந்த மர்ம நபர் உரிமையாளரை தாங்கி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் புறவழி சாலையில் காபி ஷாப் நடத்தி வரும் நிர்மல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு கடையை மூடிவிட்டு உள்ளே தூங்கியுள்ளார். அப்போது உள்ளே நுழைந்த மர்மநபர் அவரை தாக்கிவிட்டு கடையில் இருந்த 24 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன், மிக்சி உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.