மூதாட்டியின் காலில் விழுந்த மாநகராட்சி ஆணையாளர் யார் இந்த மூதாட்டி அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

Update: 2025-01-02 03:11 GMT

நெல்லை மாநகராட்சி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளால் கைவிடப்பட்டு மூதாட்டி , தாம் சிறுக சிறுக சேமித்து வைத்த 11 ஆயிரம் ரூபாய் பணத்தை வெள்ள நிவாரண நிதிக்காக முதல்வரிடம் வழங்கிய நிலையில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அவரை நேரில் சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற மூதாட்டி புஷ்பா கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் தங்கி இருந்த முதியோர் இல்லத்தில் நடந்த சிறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, கடினமான சூழலை சந்தித்த போதிலும், உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மூதாட்டியில் செயல் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதாகவும், பெருமையாக இருப்பதாகவும் அங்கிருந்தவர்கள் மத்தியில் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்