முன்னால் ஈபிஎஸ்.. பின்னால் நடந்த கோர மரணம் - நெஞ்சை நிறுத்தும் CCTV

Update: 2024-12-21 07:52 GMT

அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சென்ற வாகனத்திற்குப் பின்னால் சென்ற அதிமுக ஒன்றிய குழு தலைவரின் வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலியான நிலையில் விபத்து பதிவான பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு ஈபிஎஸ் சேலம் திரும்பிக் கொண்டிருந்தார்... மின்னாம்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி தங்கவேல் என்பவர் மீது பணமரத்துப்பட்டி அதிமுக ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதனின் கார் பலமாக மோதியது. இதில் வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அதிமுக ஒன்றிய குழு தலைவரின் கார் ஓட்டுநர் அண்ணாதுரையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் விபத்து பதிவான அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்