நகர ஆரம்பிக்கும் சிஸ்டம்.. சென்னை பக்கம் திரும்பிய கண் - தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும்?

Update: 2024-12-21 11:14 GMT

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக கூறியுள்ளது. இது, சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசா கோபல்பூரிற்கு தெற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில், இது கிழக்கு - வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என கூறியுள்ளது. இதனால் 27-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்