மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி பலி

Update: 2025-01-06 12:42 GMT

கடந்த 3ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லாவரம் அடுத்த திரிசூலம் வைகை தெருவை சேர்ந்த பாபு என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், 70% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில், சிகிச்சை பலனின்றி பாபு இன்று உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், செய்த விசாரணையில் பக்கத்து வீட்டுக்காரர் உடனான தகராறில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே பாபுவின் மன உளைச்சலுக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்