"24 மணி நேரமும் கொடைக்கானலில் நடக்கும் அராஜகம்" - கொந்தளித்த மக்கள் செய்த செயல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில், கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கள்ளசந்தையில் மது விற்பனை செய்யும் ராஜ் என்பவரின் பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் இருந்ததை அறிந்து அவற்றை பொதுமக்கள் பறிமுதல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர், சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து கையொப்பமிட்டு பெண்கள் புகார் மனு அளித்தனர். மது விற்பனை செய்த நபர் தப்பி ஓடிய நிலையில், 150 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் அவற்றை போலீசார் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.