அண்ணா பல்கலை. பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதிர்ச்சி -அடுத்து நடந்த வெளியே சொல்ல முடியா விபரீதம்
ராமநாதபுரம் அருகே தனிமையில் இருந்த காதலர்களை தாக்கி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் புத்தேந்தல் ரயில்வே கேட் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற 4 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காதலனை அடித்து துன்புறுத்தி, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், புத்தேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அந்த 4 பேரையும் பிடித்து ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் தலைமையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள சூழலில், ராமநாதபுரத்திலும் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.