சென்னையில் அரசுப்பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களை பள்ளி ஆசிரியர்களே சாதி ரீதியாக இழிவுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தையுடன், இரட்டைமலை சீனிவாசனின் பேத்தி ரேவதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், மாணவர்களை வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளனர்.