ராயர் சிட்ஃபண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் செந்தில் குமார் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் ராயல் கார்டன் என்ற பெயரில் பிரம்மாண்ட வீட்டுமனை விற்பனை வளாகத்தை திறந்துள்ளார். செந்தில்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் வந்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தனபாக்கியம் நகை கடை உரிமையாளர்களான குழந்தைவேல், முருகன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. செந்தில் குமாருக்கு சொந்தமான ஒரு வீட்டில் இருந்து 20க்கும் மேற்பட்ட பைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த ஆவணங்கள் குறித்து செந்தில்குமார் மற்றும் அவரது மனைவியிடம் 3வது நாளாக தொடர்ந்து அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அதில் கணக்கில் வராத பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்... வருமான வரி சோதனை நள்ளிரவு நிறைவடைந்தது. அதேபோல குழந்தைவேல் மற்றும் முருகன் ஆகியோருக்கு சொந்தமான வீடு நகைக்கடையில் நடத்தப்பட்ட சோதனையும் நிறைவடைந்தது.