கலெக்டர் ஆபீஸ் எதிரே... ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தைகளின் உடல்கள்... தந்தையே செய்த மாபாதகம்... ஷாக்கில் உறைந்த கடலூர்
துணி சுற்றப்பட்ட நிலையில் பச்சிளங்குழந்தை சடலம் மிதந்ததைக் கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்டனர். அப்போது இறந்த குழந்தை அருகிலேயே கட்டைப்பை ஒன்று இருந்தது...
அதனுள்ளே பார்த்த போது மேலும் ஒரு குழந்தை துணி சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் இரட்டைப் பெண் குழந்தைகளை ஆற்றில் வீசியது அவர்களின் தந்தைதான் என்பது தெரிய வந்துள்ளது... குழந்தைகள் கையில் கட்டப்பட்டிருந்த அரசு மருத்துவமனையின் அடையாளத்தை வைத்து போலீசார் விசாரித்தனர்... கடலூர் மேல் மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரியா பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 14ஆம் தேதி அவருக்கு குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் 15ம் தேதி இறந்துள்ளன... ஜெயப்பிரியா மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்ததை அடுத்து இறந்த குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்... மனைவியை புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிரபாகர், செல்லும் வழியில் குழந்தைகளை ஆற்றில் வீசிச் சென்றது தெரிய வந்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள பிரபாகரனிடம் இது குறித்து போலீசார் தொலைபேசி மூலம் விசாரித்து வருகின்றனர்.