முசிறி அருகே பைக் திருடியதாக கூலி தொழிலாளியை அடித்துக்கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், பெரியபள்ளிபாளையம் பகுதியில் கடந்த 15-ம் தேதி வாழை இலை அறுக்கும் கூலி தொழிலாளி சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் அறிவழகன் என்பவரின் பைக்கை திருடியதாக,சிவா,அறிவழகன் உள்ளிட்டோர் சேர்ந்து சுரேஷை தென்னை மட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் போலீசார் தலைமறைவாக இருந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.