"புது கிரிமினல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - ஒன்று கூடிய தமிழக கட்சிகள்

Update: 2024-11-18 01:59 GMT

"புது கிரிமினல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - ஒன்று கூடிய தமிழக கட்சிகள் 

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று, சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வழக்கறிஞர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டில், பாஜகவைத் தவிர, அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு ஒரே மேடையில் கண்டனங்களை தெரிவித்தனர். அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்தியா கூட்டணி நாடு முழுவதும் பரவிடக் கூடாது என்பதற்காகவே, பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெயர் பாரதிய என்ற தலைப்பில் சட்டங்கள் பெயர் மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அதில் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்