திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் அவர்களது சொந்த இடத்தில் புதிதாக கொடி கம்பம் நட்டு தமிழக வெற்றிக்கழக கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் உரிய அனுமதி இல்லாமல் கொடியை ஏற்றக்கூடாது என தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.