மதுவுக்கு பணம் கேட்ட மகன்.. தர மறுத்த பெற்றோர் - விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
மதுவுக்கு பணம் கேட்ட மகன்.. தர மறுத்த பெற்றோர் - விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு | Vellore
ஒடுகத்தூர் அருகே பெற்றோர் மது குடிக்க பணம் தர மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள வேப்பங்குப்பம் கிராமத்தை சேர்ந்த துபெல் என்பவர் டிரைவர் தொழில் செய்து வந்தார். வேலை இல்லா நேரத்தில் அடிக்கடி வீட்டில் பணம் வாங்கி சென்று மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி மது குடிக்க தனது பெற்றோரிடம் 100 ரூபாய் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துபெல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.