ஒற்றை வடமாநில இளைஞரை வெறிகொண்டு தேடும் சென்னை போலீஸ்
சென்னையில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனம் மாதவரத்தை அடுத்த மூலக்கடையில் உள்ள தனது ஷோருமிற்கு ஐபோனை அனுப்ப போர்ட்டர் செயலி மூலம் அணுகியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த முத்தியூர் ரஹ்மான்
என்பவரிடம் ஐபோன் டெவிவிரிக்காக தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் ஐபோனுடன் மாயமானதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால்
பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐ போனுடன் தப்பியோடிய வடமாநில நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.