நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர், இரு மகன்களுடன் டெல்லியில் உள்ள குதுப்மினார் சென்றனர். இருவரையும் கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள், அவர்களை சூழ்ந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.