'பொய் பரப்புரை வேண்டாம்' - முத்தரசனுக்கு ஈஷா கண்டனம் | Mutharasan | Isha | Kovai | Thanthi TV
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு, ஈஷா அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்களின் அழகு கூந்தலில் இல்லை, அவர்களுக்கான சுதந்திரத்தில் இருக்கிறது. கம்யூனிச சித்தாந்த அரசியல் தலைவரிடம் இருந்து இப்படியான பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈஷாவின் நற்பணிகளால் தினமும் பல்லாயிரகணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். சாதி, மத, இன பேதங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் யாதும் இன்றி பல கோடி மக்களுக்கு இந்த மண்ணின் ஆன்மீகத்தை அதன் தூய வடிவில் ஈஷா அறக்கட்டளை வழங்கி வருகிறது. ஆகவே உண்மைக்கு புறம்பான, பொய்யான அவதூறு கருத்துக்களை முத்தரசன் பரப்ப வேண்டாம் என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.