அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் - தி.மலையில் பரபரப்பு | Thiruvannamalai | Thanthi TV
மேல்மா சிப்காட் போராட்டத்தை இந்தியா முழுவதும் எடுத்து செல்வோம் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்காயத் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஒரு விவசாயி திமுகவின் விவசாயிகளுக்கான தேர்தல் அறிக்கைகள் காற்றில் விடப்பட்டன என்று சொல்லி தேர்தல் அறிக்கைகள் அடங்கிய பதாகைகளை காற்றில் பறக்க விட்டார். 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி என கூறிவிட்டு, 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.