கோவை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பாலக்காடு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், 71.50 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர். கோவையில் இருந்து எர்ணாகுளம் சென்ற பேருந்தில் சோதனை செய்த போலீசார், அதிலிருந்த சில பண்டல்களை பிரித்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ந்த போலீசார், பண்டலை எடுத்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவப்பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். உரிய ஆவணம் இல்லாததால் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார், சிவப்பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.