தமிழகத்தை உலுக்கிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. - சிக்கிய 2 பேர்..

Update: 2024-12-21 07:24 GMT

சென்னையை சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருவள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ், மாணவர் நரேஷ், மற்றும் கார்த்திக், மணி, அஜித் குமார் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ஸ்னாப் சாட் மூலமாக மாணவியிடம் பழகி நாளடைவில் அவரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மூலமாக மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியிடம் மகிளா நீதிமன்ற நீதிபதி தனி அறையில் வைத்து வாக்குமூலம் பெற்றார். மாணவிக்கும், கைது செய்யப்பட்ட நரேஷ் மற்றும் சுரேஷிற்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவான நபர்களை பிடிக்க தனிப்படைகள் பல்வேறு மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருத்தணியில் வசித்து வரும் கவி மற்றும் அம்பத்தூரை சேர்ந்த பாண்டியனை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி ஸ்நாப் சேட் மூலமாக மாணவியிடம் பழகி விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்