11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி முடித்ததும்... வெளியான அதிரடி உத்தரவு
சென்னையில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடையும் கடைசி நாளன்று மாணவர்கள் பள்ளியை விட்டு அமைதியாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமையும், 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 27-ஆம் தேதியும் முடிவடைகின்றன. அன்றைய தினம், மாணவர்கள் பள்ளி வளாகத்திலும், பள்ளிக்கு வெளியிலும் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்புடன் மாணவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.